Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமகூடுலு நரசிபுரா கும்ப ... திருப்பதி பண்பலையில் இன்று முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தியில் 20 ஆண்டுக்கு பின் உற்சவர்களுக்கு தங்க நகை அலங்காரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2016
02:02

திருப்பதி: ஆந்திர மாநிலம், காளஹஸ்தி கோவிலில் நடைபெற உள்ள, பிரம்மோற்சவத்தின் போது, 20 ஆண்டுகளுக்கு பின், உற்சவ மூர்த்திகளை தங்க நகைகளால், அலங்கரிக்க உள்ளனர்.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவில், மிகப் பழமையானது. இக்கோவில், பஞ்ச பூத தலங்களில் ஒன்று என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.

ஆந்திராவை ஆண்ட மன்னர்கள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, இக்கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். அந்த நகைகளை பிரம்மோற்சவம், மகா சிவாராத்திரி போன்ற உற்சவ சமயத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு அணிவித்து வந்தனர்.பின், ஆந்திர மாநில அறநிலையத்துறை, அந்த தங்க நகைகளை கையகப்படுத்தி, வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளது.

உற்சவ சமயத்தில் மட்டும் இவற்றை எடுத்து, உற்சவ மூர்த்திகளுக்குஅலங்கரிப்பர்.
கோவில் செயல் அதிகாரிகளின் பதவி மாற்றம் காரணமாக, 20 ஆண்டுகளுக்கு முன், வங்கி
பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகளை கோவிலுக்கு கொண்டு வருவதில்
சிக்கல் ஏற்பட்டது. நகைகளின் பாதுகாப்பிற்கு எந்த செயல் அதிகாரியும் பொறுப்பேற்க முன்
வரவில்லை.அதனால், வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது, நான்கு அல்லது ஐந்து தங்க
நகைகளை மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். தற்போது, கோவில் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பிரம்ம ராம்பா, கோவில் அறங்காவலர் குழு, ஆந்திர அறநிலைத்துறையுடன் பேசி, மார்ச், 7ம் தேதி மகா சிவாரத்திரியை ஒட்டி நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தின் போது, வங்கியில் உள்ள நகைகளை முழுமையாக
பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar