காரைக்கால்:காரைக்கால் கருக்களாச்சேரி மாகாளியம்மன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.காரைக்கால், கருக்களாச்சேரி மாகாளியம்மன் கோயிலில் கடந்த 12ம் தேதி தீமிதி திருவிழா கிழக்கத்தியார் பூஜையுடன் துவங்கியது.14ம் தேதி சக்தி கரகம் வீதி உலாவும், நேற்று முன்தினம் மாகாளியம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடந்தன. இரவு கப்பரை, வீதி உலாவும், விடியற்காலை 3 மணிக்கு தீமிதி விழாவும் நடந்தது. தீ மிதித் திருவிழா வழக்கமாக மாலை நேரங்களில் நடப்பது வழக்கம். ஆனால் காரைக்கால் கருக்களாச்சேரியில் வினோதமாக அதிகாலை 3 மணிக்கு திருவிழா நடந்தது. நேற்று விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.