ஆந்திர மாநிலம் நந்தியாலில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது நவ நந்திகள் அருளும் தலம். இங்கு பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, சோம நந்தி, மகா நந்தி, சூரிய நந்தி ஆகிய நவநந்திகள் உள்ளன. இங்குள்ள நந்திகேஸ்வரர் மகாநந்தி என்ற பெயரில் அவதரித்ததாகக் கருதப்படுகிறது. இந்தத் தலத்தை நந்தி மண்டலம் என்றும் போற்றுவர்.