Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தியாகம் நமது கடமை! பிரதோஷத்திற்கு கிளம்பியாச்சா.!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இது பெண்கள் விஷயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2016
03:02

பெண்களின் பெருமை மற்றும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை தொடர்பாக நபிகள் நாயகம் சொல்வதைக்கேளுங்கள்.
*உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் நலம் பயப்பனவாகும். அவைகளில் மிகச்சிறந்த நலம் தருவது நற்செய்கை நிறைந்த நங்கையே.
*உங்களது உறவினர்களில் இருந்து நல்லொழுக்கமும், மார்க்கப்பற்றும் உள்ள பெண்கள் கிடைத்தால் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்பெண்மணி ஏழையாக இருப்பினும் சரியே. இவ்விதம் ரத்தக்கலப்பிலுள்ள அந்த ஏழைப்பெண்ணை நீங்கள் மணம் முடிக்காவிட்டால், பூமியில் குழப்பமும் பகையும் அதிகரிக்கும்.
*ஒரு உண்மை விசுவாசிக்கு பயபக்தியும், நல்லொழுக்கமும் உள்ள வாழ்க்கைத்துணையை விட வேறு சிறந்த பாக்கியம் கிடையாது. அவள் இவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பவளாக இருக்க வேண்டும்.
*பெண்களின் மீது மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்தாதீர்கள். நீர் முதலில் பார்க்கும் பார்வை
இயல்பாக நிகழக்கூடியதாகும். இரண்டாவது தடவை பெண்களின் மீது பார்வையைச் செலுத்துவதற்கு
அனுமதியில்லை. அது பாவமாகக் கருதப்படும்.
*அன்னியப்பெண்களை வீணே பார்த்து ஆசைகொள்ளும் ஆண்களின் மீதும், அன்னிய ஆண்மக்கள் தன்னைக் கண்டு யாசிக்கக்கூடும் என்ற நோக்கத்துடன் தன்னை சிங்காரித்துக் காட்டித்  திரியும் பெண்மக்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் ஏற்படுகிறது.
*மாதர் குலமணிகள் மறைவான இடத்தில் இருக்க வேண்டியவர்கள். அவர்கள் வெளிக்கிளம்பி
செல்வார்களேயானால், சாத்தான் அவர்களை பிற ஆடவர்களின் கண்களுக்கு மிக அழகாகச் சிங்காரித்துக் காட்டுகிறான்.
*பெண்ணை நன்றாக நடத்துமாறு ஆண்டவன் ஆணையிடுகின்றான். ஏனெனில், அவர்களே உங்கள் அன்னையராகவும், அருமைப் புதல்விகளாகவும், அத்தைகளாகவும் இருக்கின்றார்கள்.
*திருமணம் செய்யும் முன்பு முதலில் பெண்ணைப் பாருங்கள். இதுதான் உங்களிடையே அன்பை
ஏற்படுத்தும். ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யக்கூடாது. பெண்கள் தங்களுக்கு பிரியமில்லாதவரை திருமணம் செய்யக்கூடாது. விதவைப் பெண்ணிடம் ஒப்புதல் பெறும் வரையிலும், கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறும் வரையிலும் திருமணம் செய்து வைக்கக்கூடாது.
*கணவனுக்கு ஏற்ற மனைவி என்பவள் அவனது கட்டளைக்கு கீழ்ப்படிவாள். ஆசையுடன் கணவன்
பார்ப்பானேயானால், அவனது ஆசைக்கு இணங்கி விடுவாள். அவனுக்கு கொடுத்த வாக்குறுதியை
காப்பாற்றுவாள். அவன் வெளியில் சென்றுவிட்டால் அவள் தன்னுடைய கற்பையும், பொருளையும்
பாதுகாப்பாள்.
*மணமகனே! திருமணத்தால் மணமகளின் மானத்தை நீ ஹலாலாக்கிக் கொண்டாய். ஆகவே,
அப்பெண்மணிக்கு உணவு, உடை முதலியவற்றை ஒழுங்காகக் கொடுத்து பணிவன்புடன் நடத்துவாயாக!
*எந்தப்பெண் தனது கணவனின் கோபத்தை கிளரும்படி பேசுகிறாளோ, அவளுடைய பெயர்
பாவிகளுடைய பட்டியலிலும், இணை வைப்பவர்களின் (கடவுளுக்கு நிகரானவர் என்று சொல்வோர்)
கூட்டத்தினருடனும் எழுதப்படும். நரகத்தில் அவளுடைய தங்கும் இடத்தை குறிப்பிட்ட பின்புதான் அவள் மரணம் அடைவாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar