Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இது பெண்கள் விஷயம் மகான் ஜெயந்த் மகான் வரலாறு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரதோஷத்திற்கு கிளம்பியாச்சா.!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2016
03:02

பிரதோஷத்தன்று சிவன் கோவில்களுக்கு செல்பவர்கள் திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களை பாடுங்கள். சிவனருளும், சகல செல்வமும் பெறுங்கள்.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றனுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான் உணர்ந்து எட்டே.

பாற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின்றேனே.

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறியாத பரமனைப்
புக்கநின்று உன்னியான் போற்றி செய்வேனே.

அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இரவும்பணிந்து ஏத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன்அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவன்அன்றி மூவரால் ஆவதுஒன்று இல்லை
அவன்அன்றி ஊர்புகு மாறு அறி யேனே.

முன்னை ஒப்பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பாகின்ற போதகத் தானே.

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடையோனே.

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே.

தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடுஅங்கி ஞாயிறும் திங்களும்
தானே மறைபொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண் கடலாமே.

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்றாங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar