சூரியன் கிழக்கு முகமாக இருக்கலாம். சந்திரன்-மேற்கு; செவ்வாய்- தெற்கு; புதன்-வடக்கு; குரு-வடக்கு; சுக்கிரன்-கிழக்கு; சனி-மேற்கு; ராகு-தெற்கு; கேது-தெற்கு. இந்த முறையில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என பரிந்துரைக்கிறது ஸம்ஸ்கார ரத்னமாலை எனும் நூல். அத்துடன், மற்ற எல்லா கிரகங்களையும் சூரியனை நோக்கி பிரதிஷ்டை செய்வதும் சிறப்பு என்றும் சொல்கிறது. விண்வெளியில் இருக்கும் கிரக வரிசைப்படியும் பிரதிஷ்டை செய்யலாம். கோள வடிவில்.. சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி என்கிற ஏழு கிரகங்கள் வரிசையாக இருக்கும். இவற்றுடன் சேர்த்து ராகு-கேதுவையும் பிரதிஷ்டை செய்யலாம்.