பதிவு செய்த நாள்
25
பிப்
2016
11:02
அவிநாசி : திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசி மகத்தேர்த்திருவிழா, 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது; 22, 23ல் தேரோட்டம் நடைபெற்றது. தெப்போற்சவ விழா, நேற்று மாலை நடைபெற்றது. ஸ்ரீசந்திரசேகர், அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில், தெப்பத்தில் எழுந்தருளினர். நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, தெப்பக்குளத்தில், சுவாமி பவனி நடைபெற்றது. ஒன்பது சுற்றுக்கு பின், உற்சவமூர்த்திகள், கோவிலுக்கு திரும்பினர். சைவ சித்தாந்த சபை தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் உமாசங்கர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு, அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்தினர், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.