கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த கொம்பாடிகுப்பம் பொன்னாலகரம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். தீமிதி திருவிழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று (24ம் தேதி) காலை 9:00 மணியளவில் அரவாண் கடபலி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, அக்னி குண்டம் அமைத்தல் நிகழ்ச்சி நடந்தன. மாலை 5:00 மணியளவில் நடந்த தீ மிதி உற்சவத்தில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (25ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.