வைத்திக்குப்பத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2016 11:02
புதுச்சேரி: வைத்திக்குப்பத்தில் 22ம் தேதி நடந்த மாசிமக தீர்த்தவாரியில், திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் சுவாமி எழுந்தருளினார். தீர்த்தவாரி முடிந்து, வடமுகத்து வகுப்பு செட்டியார் திருமண மண்டபத்தை அடைந்தார். அன்று மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு, திருமண மண்டபத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.