பதிவு செய்த நாள்
25
பிப்
2016
11:02
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, பா.ஜ., மாநில செயலாளர் செல்வகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலெக்டர் அர்ச்சனாபட் நாயக்கை, சந்தித்து அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளியங்கிரி மலை ஏறி சென்று, இறைவனை வழிபாடு செய்வதற்கு செல்லும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். குடிநீர், கழிப்பிடம், சோலார் தெருவிளக்கு, வனத்துறையினரின் பாதுகாப்பு, ஆகியவற்றை, வனம், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பேசி அதற்கான, வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.