புதுச்சேரி: ரெயின்போ நகர் சுமூக விநாயகர் கோவிலில், சவுபாக்கிய ஷோடச மகா கணபதி ஹோமம் நேற்று நடந்தது. ரெயின்போ நகர் சுமுக விநாயகர் கோவில் 7ம் ஆண்டு சவுபாக்கிய ஷோடச மகா கணபதி ஹோமம் கடந்த 21ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடந்து வருகிறது. நேற்று காலை 8.00 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, மந்தர புஷ்பம், சதுர்வேத சமர்ப்பணம், நடந்தது. மாலை 6.00 மணிக்கு, சவுபாக்கிய ஷோடச கணபதி ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.