திருக்கோவிலூர்: திருக்கோவிலூரிலிருந்து திருப்பதிக்கு, கண்ணன் பட்டாச்சாரியர் தலைமையில், பக்தர்கள் மேற்கொள்ளும் பாதயாத்திரையை, ஜீயர் சுவாமிகள் துவக்கி வைத்தார்.
திருமலை பாதயாத்திரை குழுவினர் நேற்று திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சியில் இருந்து பாதயாத்திரையாக உலகளந்த பெருமாள் கோவிலில் இருந்து, பயணத்தை துவக்கினர். ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் பயணத்தை துவக்கி வைத்தார். கண்ணன் பட்டாச்சாரியர் தலைமையில், 32 வது ஆண்டாக நடக்கும் பாதயாத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் பாதயாத்திரிகர்களை வணங்கி வழியனுப்பி வைத்தனர்.