Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூணுகோடி நாள் விரதத்தை ஒரே நாளில் ... திருவாரூர் தேரை ஆழித்தேர் என்பது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவனின் ஐந்து வடிவங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
03:03

சிவனின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி, பைரவர், பிட்சாடனர், நடராஜர், சோமாஸ்கந்தர் ஆகியவை சிறப்பானவை. சனகர், சனந்தர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு ஆசிரியராக இருந்து சிவன் உபதேசித்த கோலம் தட்சிணாமூர்த்தி. அமைதி தவழும் முகமுள்ள இவரை சாந்தமூர்த்தி என்று அழைப்பர். தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள் தங்கள் தவபலம் காரணமாக, தாங்கள் கடவுள்நிலைக்கு உயர்ந்து விட்டதாக ஆணவம் கொண்டிருந்தனர். அந்த ஆணவத்தை அடக்கி அவர்களை நல்வழிப்படுத்த சிவன் இளமையும், அழகும் மிக்கவராக அந்த வனத்துக்கு வந்தார். அவர் பிச்சை பாத்திரம் ஏந்தியிருந்ததால் பிட்சாடனர் என்று பெயர் பெற்றார். இவரை வசீகர மூர்த்தி என்று அழைப்பர். உயிர்கள் கொண்டுள்ள ஆணவத்தை பிச்சையாக ஏற்று அவர்களை உய்விப்பதே இந்த வடிவத்தின் நோக்கம். வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர்கள் சிவனின் நடன கோலத்தை தரிசிக்க விரும்பினர். அவர்களுக்காக தில்லைவனம் என்னும் சிதம்பரத்தில் சிவன் நடராஜராக நடனம் ஆடினார். ஆனந்தமாக நடனமாடியதால் இந்த வடிவத்தை ஆனந்த மூர்த்தி என்பார்கள்.

அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட சிவன் எடுத்த வடிவம் பைரவர். இவரை வக்ர மூர்த்தி என்று சொல்வர். இவரை வணங்கினால் இந்த உலகத்தில் நமக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கும். சிவனும், பார்வதியும் இணைந்த கோலத்தில் மகன் முருகனை நடுவில் அமர்த்திய கோலம் சோமாஸ்கந்தர். இவரைக் கருணாமூர்த்தி என்று அழைப்பர். குடும்ப ஒற்றுமைக்காக இவரை வணங்கலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar