பதிவு செய்த நாள்
04
மார்
2016
10:03
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழா மார்ச் 17ல், கொடியேற்றத்துடன் துவங்கி, 26 வரை நடக்கிறது. பழநி பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து, மார்ச் 16 இரவு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருஆவினன்குடி கோவிலுக்கு எழுந்தருள்வர். அங்கு 17ல், காலை, 10 - 11:30 மணிக்குள் கொடியேற்றமும், மலைக்கோவிலில், உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், ஆறாம் நாள் மார்ச், 22ம் தேதி இரவு, முத்துக்குமார சுவாமி, வள்ளி திருக்கல்யாணமும், அன்று இரவு, 9:00 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் சுவாமி உலா நடக்கிறது. ஏழாம் நாள், 23ல், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாலை, 4:30 மணிக்கு வடக்கு கிரி வீதி தேர்நிலையில் இருந்து தேர் வடம் பிடித்தல் துவங்கி நான்கு கிரி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.