பதிவு செய்த நாள்
04
மார்
2016
11:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, விடிய விடிய நான்கு கால சிறப்பு பூஜைகள் நடக்கின்ற-ன. மார்ச், 7ல், மகா சிவ-ராத்-திரி நடக்-கி-ற-து. இதற்-காக மீனாட்சி அம்-மன் கோவில் நடை, இரவு முழு-வதும் திறந்-தி-ருக்கும். இதை-ய-டுத்து, மார்ச், 14ல், பங்குனி மாத பிறப்பு, உச்சி காலத்தில் தீர்த்தம், கோடை வசந்த உற்சவம் துவங்குகிறது. மார்ச், 18ல், சித்திரை பெருவிழாவின் கொட்டகை தேர் முகூர்த்த பூஜைகள் நடக்கின்ற-ன.இதையடுத்து, சித்திரை திருவிழாவிற்கான கொட்டகை அமைக்கும் பணிகள் துவங்கும். மார்ச், 26ல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருள்கின்றனர்.
சித்திரை பெருவிழா: மதுரையின் முத்தாய்ப்பு விழாவான சித்திரை பெருவிழா, ஏப்., 10 காலையில், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்., 17ல், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்., 19ல், திருக்கல்யாணம், ஏப்., 20ல், திருத்தேரோட்டம் நடக்-கும்; ஏப்., 21ல், சித்திரை திருவிழா நிறைவடைகிறது.