பதிவு செய்த நாள்
04
மார்
2016
11:03
மணலி: அய்யா வைகுண்ட தர்மபதியின், அவதாரத் திருநாள் விழா, மணலி புதுநகரில் நேற்று நடந்தது. மணலி புதுநகரில், அய்யா வைகுண்ட தர்ம பதியின், 184வது அவதார தினத்தை முன்னிட்டு, பழைய வண்ணாரப்பேட்டை தங்கக்கிளி திருமண மாளிகையில் இருந்து, இரண்டு குதிரை பூட்டப்பட்ட அலங்கார சாரட் வண்டியில், அய்யா அருளச்செய்த அகிலத்திரட்டு ஆகமத்தை வைத்து, அதை சுமந்து செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து, நேற்று ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம், பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் வழியாக, மணலி புதுநகர் வைகுண்ட தர்மதிபதியை சென்றடைந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ‘அய்யா ஹரஹர சிவ சிவ’ என, கோஷம் எழுப்பி சென்றனர். பின், உச்சிபடிப்பு நிகழ்வு, அய்யா தொட்டில் வாகனத்தில் வலம் வருதல், வைகுண்ட ஜோதி ஏற்றுதல், ஊஞ்சல் மற்றும் தாலாட்டு சேவைகள் நடந்தன.