மகுடேஸ்வரர் கோவில் அறிவிப்பு பலகை: கொடுமுடி பக்தர்கள் குமுறல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2016 11:03
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்றதாகும். கோவில் முன்புறம், இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மாற்று மதத்தினரும் கோவில்களுக்குள் வந்து செல்ல அனுமதிப்பதே இந்து மதத்துக்கு பெருமையளிக்கும். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மற்ற கோவில்களில் இது போன்ற அறிவிப்பு இல்லை. இங்கு மட்டும் எதற்காக இப்படி அறிவிக்கப்பட்டுள்ளது? என தெரியவில்லை. இவ்வாறு கூறினர்.