காஞ்சிபுரம் ஹயகிரீவர் கோவிலில் மாணவர்கள் வேண்டுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2016 11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஹயகிரீவர் கோவிலில், நேற்று மாலை முதல் இரவு வரை மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகம் முழுவதும் இன்று, பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கிறது. கல்வி கடவுளான ஹயகிரீவரை வழிபட்டால், அதிக மதிப்பெண் பெற அருள்புரிவார் என்பது மாணவர்களின் நம்பிக்கை. இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள ஹயகிரீவர் கோவிலுக்கு குவிந்த மாணவர்கள், சுவாமியின் பாதத்தில், ஹால் டிக்கெட்டை வைத்து வணங்கினர்.