மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இளம்பிள்ளை அருகே, பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, நேற்று மாலை நடந்தது. ஊர் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான இளைஞர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது குதிரை நடனம், கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, மாவிளக்கு, அக்னி கரகம், அலகு குத்துதல் நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.