பதிவு செய்த நாள்
05
மார்
2016
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின், 15ம் ஆண்டு ஆராதனை விழா மார்ச்,4ல் துவங்கியது.
மார்ச்,4 காலை, 6:30 முதல், 10;30 மணி வரை, ஹோமம், அதிஷ்டானத்தில் அபிஷேகம், அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து, கணேஷ் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும், மாலையில், பகவானின் அனுபவங்களை பகிர்தல் நிகழ்ச்சியும், மயிலாடுதுறை அறிவகம் இல்லக் குழந்தைகளின் பக்தி பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சியும் நடந்தது. மார்ச், 5 காலை, 6:30 முதல், 11:00 மணி வரை, மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில் அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, தீபாராதனை, காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை நித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில் தீர்த்த நாராயண பூஜை, பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு பகவான் யோகி ராம்சுரத்குமாரின் வெள்ளி ரத வீதி உலாவும் நடக்கிறது.