பதிவு செய்த நாள்
05
மார்
2016
11:03
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டையில் உள்ள பிரசன்ன லட்சுமி வெங்கடரமணா சுவாமி கோவில், ஆண்டு பிரம்மோற்சவம், 17ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.
கர்நாடக அரசின் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான, பிரசன்ன லட்சுமி வெங்கடரமணா சுவாமி கோவில், 81ம் ஆண்டு பிரம்மோற்சவம் வரும், 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் சிறப்பு பூஜைகள், மகா மங்களார்த்தி, பஜனைகள், இரவில் சிறப்பு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, மங்கள இசையுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். வரும், 25ம் தேதி காலையில் யானை நகர்வலம், செண்ட மேளம், இசை கச்சேரி, மதியம் சிறப்பு பூஜை, பிரசாத வினியோகம், அன்னதானம், மாலையில் பக்கல் பூரம் கேரள கலாசார கலை நிகழ்ச்சி, மாலையில் கோவில் வளாகத்தில் நாதஸ்வர கச்சேரி, இரவில் பரத நாட்டிய சங்கீத கச்சேரி ஆகியவையும், அதிகாலை, 2:00 மணிக்கு கேரளாவின் வண்ணமயமான வாண வேடிக்கைகளும் நடக்கின்றன.