விழுப்புரம்: விழுப்புரம் கயிலாசநாதர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு லட்டு தயாரிக்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
விழுப்புரம் பெரியநாயகி கயிலாசநாதர் கோவலில் வரும் 7 ம் தேதி மகா சிவராத்திரி நடக்கிறது. விழாவின் துவக்கமாக காலை 6:00 மணிக்கு, சங்கு ஸ்தாபனம், மாலை சிறப்பு பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு 1008 சங்கு அபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு, விழுப்புரம் தெய்வ தமிழ் சங்கம் சார்பில் சிவாலய நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக நடை பயணத்தை நகராட்சி சேர்மன் பாஸ்கரன் துவக்கி வைக்கிறார். இவ்விழாவில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் மார்ச், 4 ல் பக்தர்கள் ஈடுபட்டனர்.