பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கூந்தல் அழகி அம்மன் கோவிலில் மாசி மாத உற்வசத்தையொட்டி சுவாமி வீதியுலா காட்சி நடந்தது.
பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கூந்தல் அழகி அம்மன் கோவிலில் மாசி மாத உற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி துவங்கி தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. மார்ச் 6 முன்தினம் கூந்தல் அழகி அம்மன் புஷ்ப அங்காரத்தில் வீதியுலா காட்சி நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் மேலக்கச்சேரி, வாணவேடிக்கை, கரகாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட விசேஷ கச்சேரிகள் நடந்தது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.