Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தை வரம் சாந்தமாக இருங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2016
02:03

அன்று சித்திரை 18ம் தேதி! அக்னி நட்சத்திரம் ஆரம்ப காலம்! காஞ்சி மடத்தின் வாசலில் நீர் மோர் விநியோகம் பண்ணிக் கொண்டிருந்த பாட்டியை பெரியவர் அவசரமாக அழைத்தார். இன்னிக்கி நெறய்...ய்ய தயிர் வாங்கி, ரெண்டு மூணு அண்டால நெறைய்ய நீர் மோர் தயார் பண்ணி வை!..... ஆகட்டும்......பெரியவா!...வெறும் மோரா இல்லாம, அதுல பெருங்காயம், கடுகு தாளிச்சுக் கொட்டு! கொஞ்சம் கறிவேப்பிலை நன்னா..கசக்கிப் போடு! வேணுன்னா ரெண்டு பச்சமொளகா கூட நறுக்கிப் போடலாம்! இஞ்சித்துண்டு போடற வழக்கம் உண்டோ?.....போட்டுடறேன்....பெரியவா...பாட்டி தலையை ஆட்டிவிட்டு, உக்ராணம் பக்கம் போய் விட்டாள்.... பெரியவர் சொன்னபடி செய்ய. எதற்காக பெரியவர் இதைச் சொல்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் அன்று அவ்வளவு கூட்டமும் இல்லை. மடத்தில் இருந்தவர்களுக்கு குழப்பம். அன்று கச்சபேஸ்வரர் கோவில் எதிரில் கடவுள் எதிர்ப்பு கட்சி ஒன்றின் பொதுக்கூட்டம் பகல் ஒரு மணிக்கு நடந்து முடிந்தது.

தொண்டர்கள் மடத்துக்கு பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்! நடந்து வந்ததில் எல்லாருக்கும் நா வறட்டும் தாகம்! அவர்கள் மடத்துவாசலில் மோர் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.யோவ்!...அங்க பாருய்யா! நீர் மோர் குடுக்கறாங்க...வாங்க போலாம்!பாட்டி அத்தனை பேருக்கும் மோர் கொடுத்தார்.அத்தனை அண்டாவும் காலி!!! ஒரு சொட்டு கூட மிஞ்சவில்லை!! தாகம் தீர்ந்ததும், அண்டாவை விட்டுவிட்டு மடத்தை பார்த்தார்கள்.கன்னையா.....வர்றியா?...உள்ளாற சாமிய பாத்துட்டு போலாம்? முணுமுணுத்தார் ஒருவர். ஆமாண்ணே! எனக்கும் ஆசையாத்தான் இருக்கு....சாமீ ரொம்ப பெரிய கடவுள்தான்! ஆனா கூட வந்தவங்க திட்டுவாங்களே.... இதில் வேடிக்கை என்னவென்றால்.....நுõறு பேருக்குமே இதே கவலை... பயம் ! கடவுள் இல்லை என்று அவரைத் திட்டித் தீர்த்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்,எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மடத்துக்குள் நுழைவது? அவர்கள் அவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில், மடத்தில் இருந்து சீடர்கள் வேகமாக வெளியே வந்தார்கள்.

பின்னாலேயே பெரியவரும் வந்து விட்டார். நீங்கள்லாம் உள்ள வந்து என்னைப் பாக்காட்டா என்ன? இதோ...நானே...ஒங்களை எல்லாம் பாக்க வரேனே!.. என்பது போல், நாலைந்து பண்டிதர்களுடன் வேதாந்தம் பற்றி பேசிக்கொண்டே பெரியவர் வெளியே வந்தார்.  எதிரே உள்ள கங்கைகொண்டான் மண்டபத்து ஆஞ்சநேயரை தரிசிக்க அவர் சென்று கொண்டிருந்தார். ஆக, பெரியவரை தரிசிக்க வேண்டும் என விரும்பிய அந்தத் தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி விட்டது. வறுத்தெடுக்கும் சூடான தெருப் புழுதியில் அத்தனை பேரும் தடாலென்று விழுந்து பெரியவரை வணங்கினார்கள். பெரியவரும் அவர்களுக்காக அந்த சுடு மண்ணில் நின்றார். எல்லார்க்கும் நீர் மோர் கெடைச்சுதா?.... கெடச்சுது.....சாமீ!...... ஸாமீ..... துண்ணுõறு!..... என்று எல்லாரும் திருநீறும் கேட்டு வாங்கினார்கள். தாயைத் தவிர வேறு யாரால் இப்படிக் கருணை பொங்க அருள்புரிய முடியும்? அந்த தொண்டர்களில் பலருடைய கண்களில், பெரியவர் காட்டிய அன்பு கண்ணீரையே வரவழைத்துவிட்டது! அகழ்வாரைத் தாங்கும் நிலம்! வைதாரையும் வாழ வைக்கும் ரூபம்! புதிய, பழைய பக்தர்கள் புடைசூழ ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெரியவர் கிளம்பினார்.(மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar