வைரஸ் எனப்படும் விஷக்கிருமிகளை நம்மால் சாதாரணமாகப் பார்க்க முடியாது. மைக்ரோஸ்கோப் மூலம் அதன் உருவத்தை பெரிதுபடுத்திப் பார்க்கலாம். கண்ணுக்கு தெரியாத இந்த நுண்கிருமிகள் உடலுக்குள் சென்றுவிட்டால், அது மனிதனை பாடாய்படுத்தி விடும். உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கான ஜீவ அணுக்களை அழித்து விடும். பலசாலியும் பலவீனன் ஆகிவிடுவான். இந்த விஷக்கிருமியைப் போன்று இன்னொரு வைரஸ் இருக்கிறது. அது சாத்தானின் துõண்டுதலால் உருவாகும் வைரஸ். இந்த வைரசுக்கு பாவம் என்று பெயர். நம்மையும் அறியாமல் நமக்குள்ளே நுழைந்து நம் ஆத்துமாவை அது சாகடித்து விடும். கீழ்ப்படியாமை என்ற சிறிய பாவம் ஆதாம், ஏவாளின் ஜீவனை அழித்து விட்டது. இதற்கே இப்படியென்றால் கொடிய பாவங்களால் நிலைமை என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சரி...பாவம் என்னும் வைரசை அழிக்க வழியிருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது.தேவனுடைய வார்த்தைகளால் நம்முடைய இருதயத்தை நிரப்பிக்கொள்ளுகிற போது அந்த வார்த்தைகள் பாவம் என்ற வைரசுக்கு எதிராக நின்று செயல்படும். நம்மில் அந்த எதிர்ப்பு இல்லாமல் போகும் போது தான், பாவம் என்ற வைரஸ் நம்மை அழித்து விடும்.