Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எமதர்மனின் பி.ஏ. யார்? சிவ சாயுஜ்ய விரதம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கைக்கு கை மாறும் பணம்.. அதைக் கைப்பற்ற நினைக்குது மனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2016
02:03

பணம் தேவையற்றது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் கைக்கு கை மாறும் அதை கைப்பற்றுவது ஒன்றே வாழ்க்கை என்று நினைப்பதும் கூடாது. பணமே வாழ்க்கை என்று கருதுபவர்கள் நெருப்பை வீடு முழுவதும் மூட்டி, தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறார்கள். தன்னம்பிக்கை கொண்ட மனம் ஒளிவிளக்கு போல பிரகாசிக்கும். விளக்கின் மூலம் இருள் நீங்குவது போல, தன்னம்பிக்கை படைத்தவர்களின் எதிர்காலமும் ஒளிமயமானதாக விளங்கும். ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமே மன ஒருமைப்பாடு தேவை என்றும், மற்றவர்கள் இஷ்டம் போல வாழ்வு நடத்தலாம் என்றும் மக்கள் தவறாக எண்ணுகிறார்கள். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் மன ஒருமைப்பாடு அவசியம். இந்த உண்மையை உணர்ந்து மனதை கட்டுக்குள் வையுங்கள். மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதைக் கட்டுக்குள் வைப்பது என்பது காற்றைக் கையில் பிடிப்பதற்குச் சமம். ஒழுக்கநெறி தவறாதவர்களாலும், விடாமுயற்சியுடன் செயல்படுபவர்களாலும் மட்டுமே மனதை எளிதாக கட்டுப்படுத்த முடியும். பெற்றோரைக் கடவுளாக மதித்து வணங்க வேண்டும். பெண்களைத் தாயாகப் போற்றி மதிக்க வேண்டும். இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல் இளம்பெண்களுக்கும் இந்த அறிவுரை பொருந்தும். இளம்பெண்கள் தாய்மை உணர்வோடு மற்றவர்களுடன் பழக வேண்டும். உண்ணும் உணவு மிதமானதாகவும், நல்ல உணர்வைத் துõண்டும் விதத்தில் இருக்க வேண்டும். தினமும் முன் இரவில் உறங்கவும், அதிகாலையில் விழித்தெழவும் வேண்டும். இதுவே நல்ல உடல்நிலைக்கும், வாழ்வின் முன்னேற்றத்திற்கும் உதவும்.

எண்ணம், சொல், செயல் மூன்றும் உயர்ந்த சிந்தனைகளைத் துõண்டுவதாக இருக்க வேண்டும். ஆன்மிக சிந்தனையாளர்களின் வாழ்க்கை வரலாறு, நுõல்களை அடிக்கடி படிப்பது அவசியம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏகபத்தினி விரதத்தை ஆண்களும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். பெண்களும் பதிவிரதையாக தன் கணவருக்கு உண்மையானவளாக இருப்பது அவசியம். தினமும் இளைஞர்கள் ஒரு மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம். அது யோகாசனம், ஜிம்பயிற்சி, நடைபயிற்சி, உடல் உழைப்பிற்குரிய பணி என விருப்பம் போல எதுவாகவும் இருக்கலாம். வாழ்வில் பிரச்னை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிரச்னைக்கு தீர்வு காணாமல் மவுனம் சாதிப்பதும், அதை சகித்துக் கொண்டும் வாழ வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.  உண்மையில் பிரச்னைகள் தான் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு துõண்டுகோலாக அமைகிறது. கடவுள் ஒருவரே. அனைவருக்கும் தாயும் தந்தையுமாக அவர் இருக்கிறார். நாம் அனைவரும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பதை உண்மையை உணர்ந்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ வேண்டும். எரியும் தீபத்தால் மட்டுமே மற்றொரு தீபத்தை ஏற்ற முடியும். சிறியவர்களான இளைஞர்களுக்கு வழிகாட்ட விரும்பும் பெரியவர்கள் நல்ல எண்ணம், பண்பாடு, ஒழுக்கம் ஆகிய உயர்ந்த பண்புகளைக் கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.  புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளைக் கண்டால் பயந்து விலகுவது போல தீயகுணம் படைத்த கொடியவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். அவர்களைக் கண்டிக்க முயன்றால் பல பிரச்னைளை வாழ்வில் சந்திக்க நேரிடும்.  (மகான் புருஷோத்தமானந்தர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar