பதிவு செய்த நாள்
10
மார்
2016
11:03
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள, அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில், அங்காளம்மன் கோவில் உள்ளது. பிப்., 25-ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஆபரணம் எடுத்து வருதல், அம்மன் அழைத்தல், சிரசு எடுத்து ஆடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து அலகு தரிசனம், பூக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் திருவிழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து, சக்தி கரகங்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. குண்டத்தில் முதலில் கோவில் பூசாரி பூப்பந்தை உருட்டி விட்டு இறங்கினார். தொடர்ந்து, சக்தி கரகங்கள் இறங்கின. நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். அங்காளம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம், பரிவேட்டை நடந்தன.