ஆனந்தாயி கோவில் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2016 11:03
இடைப்பாடி: இடைப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டியில் உள்ள ஆனந்தாயி அங்காளம்மன் கோவிலில், நேற்று நடந்த தெப்பத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இடைப்பாடி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தாயி அங்காளம்மன் சுவாமியின் மாசி மாத உற்சவம் கடந்த மாதம், 22ம் தேதி தொடங்கியது. 15 நாட்களாக நடந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தீ மிதி விழா நேற்று முன்தினம் அதிகாலை நடந்தது. பின்னர் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. நேற்று தெப்பத் திருவிழாவில் ஊஞ்சல் சேவை நடந்தது. தெப்பகுளத்தில் இருந்து ஆனந்தாயி அங்காளம்மன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பரமானந்த சுவாமிகள் நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.