கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் சிவராத்திரி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2016 12:03
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மெய்கண்ட சித்தர் குகையில், சிறப்பு மலர் அலங்காரத்துடன் ஆராதனைகள் நடந்தது. சோமலிங்கர், நந்தி, ஓங்கார விநாயகருக்கு வேதி தீர்த்த அபிஷேகத்துடன், 4 கால சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாகாபரண அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தேவார, திருவாசக பாராயணத்துடன் 4 கால பூஜைகள் நடந்தது. 30 வகை அபிஷேகம் நடந்தது. உற்சவர் பிரகார வலம், அன்னதானம் நடந்தது. ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். * கசவனம்பட்டி மல்லீஸ்வரர் கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. * நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை செண்பகவள்ளி கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தது. கலச பூஜைகளும் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து பூஜையில் கலந்து கொண்டனர்.