பதிவு செய்த நாள்
11
மார்
2016
10:03
மயிலாப்பூர், கோலவிழி அம்மனுக்கு, இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மயிலாப்பூர், கோலவிழி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய, 50 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் நடந்தன. அதில், புதிய பிரகார மண்டபம் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், பொங்கல் வைக்கும் மேடை, பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கருவறை பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்ததும், இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கும். காலை, 6:00 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு, 7:00 மணிக்கு மேல், கோலவிழி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடக்கும். மண்டல பூஜைகள், இன்று மாலை துவங்கி, தொடர்ந்து, 48 நாட்கள் நடைபெறும். இரவு, 10:00 மணிக்கு சிம்ம வாகனத்தில், அம்மன் வீதியுலா நடைபெறும். - நமது நிருபர் -