பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
சிதம்பரம்: மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் இரண்டு இடங்களில் நடந்த நாட்டியாஞ்சலி விழா நேற்றுடன் நிறைவடைந்தது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 35ம் ஆண்டு நாட்டியாஞ்சலி ராஜா அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்திலும்; சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில், நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் வளாகத்திலும், கடந்த 7ம் தேதி துவங்கி நேற்று வரை ஐந்து நாட்கள் நடந்தது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி டிரஸ்ட் விழாவில் 35 நிகழ்ச்சிகளில் 60 நடன கலைஞர்களும், தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் விழாவில் 69 நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும் பங்கேற்றனர். இரு இடங்களிலும் சென்னை, கோவை, மதுரை, பெங்களூரூ, டில்லி, அமெரிக்கா, லண் டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டியப் பள்ளி மாணவியர்கள், முன்னணி நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். நாட்டியாஞ்சலி துவங்கியதும் முதல் நிகழ்ச்சியாக அண்ணாமலை பல்கலைக்கழக இசைக் கல்லு ாரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்பது வழக்கம். நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடியால், பல்கலை., மாணவர்கள் பங்கேற்க முடிய õமல் ஏமாற்றம் அடைந்தனர். இருதரப்பு போட்டா போட்டியால் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் குறைந்து காணப்பட்டனர்.