ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் – ஆண்டிமடம் சாலையில் உள்ள தெத்து விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை கோபூஜை, சூர்ய பூஜை, 2ம் கால யாக சாலை பூஜை நடந்து கடம் புறப்பாடாகி காலை 10:10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ரவிசுந்தர், ஜெய்சங்கர் குருக்கள் கும்பாபிஷேத்தை நடத்தி வைத்தனர். செயல் அலுவலர் சீனுவாசன், பூவராகசுவாமி கோயில் திருப்பணிக்குழு தலைவர் சண்முகம் பங்கேற்றனர்.