பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
அன்னுார்: குமாரபாளையம், காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. குமாரபாளையம் காமாட்சியம்மன், தண்டு மாரியம்மன் கோவில்கள், 60 ஆண்டு பழமையானவை. இக்கோவில்களில் மூன்று முறை கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. நான்காவது முறையாக தற்÷பாது, திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா, 9ம் தேதி காலை, கணபதி பூஜையுடன் துவங்கியது. மாலையில் மங்கள வாத்திய ங்களுடன், ஊர் மக்கள் ஊர்வலமாக முளைப்பாரி, தீர்த்த கலசங்கள் எடுத்து வந்தனர். இரவு யாகசாலை பூஜை நடந்தது. 10ம் தேதி திருமுறை பாரா யணமும், யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலையில் யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 6:35 மணிக்கு காமாட்சியம்மன், தண்டுமாரியம்மன் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சாமிகள் அருளுரை வழங்கினார். திருமுறை, சிவாகமம் வாசிக்கப்பட்டது. இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. காமாட்சியம்மன் சுவாமி திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடந்தது.