குளித்தலை: சீனிவாசநல்லூர் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த, மேல சீனிவாசநல்லூர் பகவதிஅம்மன், மலையாளிகருப்பு, புதுமாரியம்மன், இரட்டை பிடாரிஅம்மன் கோவில் மஹா கும்பாபிசேகம் நடந்தது. இதில், மேலசீனிவாசநல்லூர் பஞ்சாத்து தலைவர் பகவதிபுகழேந்தி தலைமை வகித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.