சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன தெப்போற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2026 10:01
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா, தெற்போற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த மாதம் 25ம் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. அதையடுத்து, கடந்த 2ம் தேதி தேரோட்டம், 3ம் தேதி தரிசன விழா விமர்சையாக நடந்தது. அதனை தொடர்ந்து நிறைவு நாளன நேற்று முன்தினம் இரவு, சிதம்பரம் கனக சபை நகரில் உள்ள ஞானபிரகாசம் குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. நடராஜர் கோவில் உற்சவரான சந்திரசேகரர், அம்பாளுடன் தெப்பலில் எழுந்தருளி குளத்தை வளம் வந்து நீராழி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நீராழி மண்டபத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். நிகழ்ச்சியில் சிதம்பரம் நகரமன்ற தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ் உட்பட கவுன்சிலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.