புதுச்சேரி: முத்தியால்பேட்டை ஹயக்ரீவர் கோவிலில் நேற்று நடந்த சகஸ்கரநாம அர்ச்சனையில் மாணவ, மாணவியர் அதிக அள வில் பங்கேற்றனர். கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் அதிபதி ஹயக்ரீவர். இதனால், பள்ளி முதல் கல்லுாரி வரை படிக்கும் மாணவ, மாணவியர், ஹயக்ரீவரை வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முக்கியமாக, தேர்வு நேரங்களில் இக்கோவில்களில் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கும். பத்தாம் வகுப்பு தேர்வு நாளை (15ம் தேதி) நடக்க உள்ள நிலையில், முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள, லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், மாணவ மாணவியர் அதிக அள வில் குவிந்தனர். கோவிலில் நடந்த, சகஸ்கரநாம அர்ச்சனையில் பங்கேற்று வழிபட்டனர்.