பதிவு செய்த நாள்
15
மார்
2016
11:03
பண்ருட்டி: திருவதிகை, சரநாராயண பெருமாள் கோவில் மகா சம்ப்ரோஷணம், வரும் 18ம் தேதி நடக்க உள்ளது; யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது. விழாவையொட்டி, நேற்று காலை 10:00 மணியளவில், சங்கல்பம், வாஸ்து ஹோமம், புண்யாஹம், மதியம் 12:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலையில், ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, அனைத்து குண்டங்களிலும் அக்னி பிரதிஷ்டை, யாகசாலை பிரவேசம் நடந்தது. இன்று (15ம் தேதி) காலை 7:30 மணிக்கு, புண்யாஹம், நித்யஉற்சவர் திருமஞ்சனம், மாலை 5:30 மணிக்கு, சர்வ தேவார்ச்சனம், கும்பசய னம், யாகசாலை விசேஷ திருவாராதனம், இரவு 9:00 மணிக்கு, தீபாராதனை நடக்கிறது. நாளை (16ம் தேதி) காலை, மகாசாந்தி ஹோமமும், மாலையில், அனைத்து குண்டங்களில் பிரதான ஹோமங்களும் நடக்கிறது.
தொடர்ந்து, 17ம் தேதி காலை, ஆவாஹன ஹோமம், நவகலச ஆவாஹனம், பெருமாள் விசேஷ திருமஞ்சனம், வேதபிரபந்த சாற்றுமுறை, பிற்பகல் 3:00 மணிக்கு, விசேஷ சயனாதிவாசம், பிரதான குண்டத்தில் விசேஷ ஹோமங்கள், வேதபிரபந்த சாத்துமுறை, இரவு 10:00 மணிக்கு, தீபாராதனை நடக்கிறது.கும்பாபிஷேக தினமான 18ம் தேதியன்று, காலை 6:00 மணிக்கு, விஸ்வரூபம், சுப்ரபாதம், கோ பூஜை, தொடர்ந்து யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, காலை 10:00 மணிக்கு, ராஜகோபுரம், விமான கலசத்திற்கு மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. காலை 10:10 மணிக்கு, மூலவர் பெரிய பெருமாள் பிரதிஷ்டை, திருவாராதனம், பிரம்மகோஷம், அட்சதை ஆசீர்வாதம், சாற்றுமுறை சர்வதரிசனம், மாலை 6:00, மணிக்கு, உபயநாச்சியார் சகிதம் பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.