காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2016 11:03
காரைக்கால்: கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காரைக்கால் பாரதியார் சாலையில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. இதனையொட்டி, பஞ்ச மூ ர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் கொடிகம்பத்தில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து விநாயகர், சு ப்ரமணியர், கைலாசநாதர், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று (1௫ம் தேதி) பஞ்சமூர்த்திகள் அபி÷ ஷகம் முடிந்து, விநாயகர் மூஷிகவாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், சூரிய பிரபை வாகனத்தில் கைலாசநாதர், காமதேனு வாகனத்தில் சுந்தராம்பாள், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. வரும் 22ம் தேதி தேரோட்டம், 25ம் தேதி தெப்÷ பாற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.