பதிவு செய்த நாள்
15
மார்
2016
11:03
சென்னை: ஆந்திராவில் அமைய உள்ள கன்யகா பரமேஸ்வரி கோவிலுக்காக, பிரதிஷ்டை செய்ய உள்ள, 90 அடி அம்மன் சிலைக்காக, பி ரம்மாண்ட பஞ்லோக அம்மன் பாதம், பக்தர்கள் பார்வைக்காக, நாளை சென்னை வருகிறது. ஆந்திரா, மேற்கு கோதாவரி மாவட்டம், பெனுகொண்டாவில், 120 அடி உயரத்தில், வாசவி கன்யகா பரமேஸ்வரி கோவில் அமைய உள்ளது. 2017 ஜனவரியில் திறக்கப்பட உள்ள, அந்த கோவிலில், 90 அடியில் அம்மன் சிலை அமைகிறது. சிலைக்கான பாதம், 1,500 கிலோ பஞ்சலோகத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அந்த பாதம், அலங்கரிக்கப்பட்ட தேரில், பக்தர்களின் தரிசனத்திற்காக, பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறது. சென்னை, கொத்தவால்சாவடியில் உள்ள கன்யகா பரமேஸ்வரி கோவிலுக்கு, நாளை பாதம் வர உள்ளதால், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.