சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பண்ணாரி அம்மன் உற்சவர் சிலை, கிராமங்களில் வீதி உலா சென்றது. சிக்கரம்பாளையம் கிராமத்தில் துவங்கிய நிகழ்ச்சி, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்றிரவு சத்தியமங்கலம் நகர் பகுதியில் வீதி உலா முடிந்து பட்டவர்த்தி அய்யன்பாளையம் சென்ற அம்மன், பின்னர் புதுவடவள்ளி, புதுகுய்யனூர், பசுவாபாளையம், புதுபீர்கடவு, ராஜன்நகர் வழியாக பண்ணாரி கோவிலை அடைந்தது. இதை தொடர்ந்து கம்பம் நடும் விழா, அதிகாலையில் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.