ஸ்ரீவி., ஆண்டாள் கோவில் பங்குனி உத்திரம் விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2016 10:03
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.விழாவை தொடர்ந்து இதற்கான கொடிபட்டம் மாடவீதிகள் வழியாக, யானை முன் செல்ல கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் காலை, 10:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதைதொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.செப்பு தேரோட்டம்நேற்று துவங்கிய விழா மார்ச் 27 வரை நடக்கிறது. 9ம் நாளான மார்ச் 23 பங்குனி உத்திரம் அன்று காலை, 7 மணிக்கு செப்புத்தேரோட்டம், மாலை, 6:30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. மார்ச் 27, மாலை, 6 மணிக்கு புஷ்பயாகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா நடக்கிறது.