பதிவு செய்த நாள்
15
மார்
2016
06:03
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பங்குனித் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச், 24ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆதிபிரம்மா திருநாள் எனப்படும் பங்குனித்தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை, 3.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், கொடியேற்ற மண்டபத்துக்கு, 4 மணிக்கு வந்தார். சுந்தர் பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை, 5.30 மணி மேல், 6.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றப்பட்டது. கோவில் இணை ஆணையர் ஜெயராமன், மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்வாமி தரினசம் மேற்கொண்டனர்.