சின்னமனூர்: சின்னமனூர் அருகே பாதையை சமன்படுத்தும் போது 18ம் படி கருப்பசாமி சிலை கிடைத்தது. இந்த சிலையை அப்பகுதி விவசாயிகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்கின்றனர். சின்னமனூர்-எரசக்கநாயக்கனூர் ரோட்டில், கோயில் திருவிழாவிற்காக கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த விவசாயிகள் பாதையை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாறையை அப்புறப்படுத்திய போது சுவாமி சிலை இருப்பதை பார்த்தனர். அரிவாளை உயர்த்தி பிடித்த நிலையில், பாம்பு வாகனத்துடன் 18ம் படி கருப்பசாமி உருவம் இருந்தது. அப்பகுதி மக்கள் சிலை கிடைத்த இடத்தில் பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்தனர்.விவசாயி ஜெகதீஸ்வரன் கூறுகையில், ""சுயம்புவாக கிடைத்த கருப்பசாமிக்கு ஆட்டு கிடா, சேவல் அறுத்து வழிபாடு நடத்தினோம். தொடர்ந்து 48 நாட்கள் இப்பகுதி விவசாயிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படும், என்றார்.