புதுச்சேரி: பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா நேற்று நடந்தது. தவளக்குப்பம் அடுத்த பூரணா ங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்று வந்த விழாவில், 14ம் தேதி ரணகளிப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 5:30 மணிக்கு மயானக் கொள்ளை, தேரோட்டம் நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, புருஷோத்தம்மன் எம்.எல்.ஏ., இந்து சமய நிறுவன ஆணையர் தில்லைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று இரவு 7:00 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.