சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் பங்குனி பிறப்பு படி பூஜை நடந்தது.மூலவர் ஐயப்பன், கன்னி மூலக்கணபதி, மஞ்சமாதா, நாகராஜா, கருப்பர் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பதினெட்டு படிகள் மலர் அலங்காரம் செய்து வெங்கடேஷ்வர சிவாச்சாரியார் தலைமையில் தீபாராதனை நடந்தது.குருசாமி செல்வராஜ்,ஐயப்பபக்தர்கள் பங்கேற்றனர்.