Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நந்தி வாகனத்தில் மருந்தீசுவரர் வீதி ... ஸ்ரீ தியாகராஜர் எனும் இசை நாடகம்: வரும் 19ல் கோவையில் அரங்கேற்றம் ஸ்ரீ தியாகராஜர் எனும் இசை நாடகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டு பழமையான கிராமக்கோயில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி!
எழுத்தின் அளவு:
300 ஆண்டு பழமையான கிராமக்கோயில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி!

பதிவு செய்த நாள்

17 மார்
2016
11:03

சிவகங்கை: படமாத்தூர் அருகே இலுப்பக்குடியில் 300 ஆண்டு பழமையான வாலகுருநாதசுவாமி, அங்காள ஈஸ்வரி கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது. இந்த கோயில் அர்த்த மண்டபம்,மகாமண்டபத்தை அடுத்து சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மூலவரான வாலகுருநாத சுவாமி,அருகே அங்காள ஈஸ்வரி அம்மன் அமர்ந்துள்ளனர். இந்த சன்னதி வெளிபிரகாரத்தில் இருந்து 80 அடி தூரத்தில் உள்ளது. உத்திராயான காலமான மார்ச் 8 முதல் மார்ச் 20 வரையும், தட்சணையான காலமான செப்., 17 முதல் செப்., 29 வரையும் உதயமாகும் சூரிய ஒளி மூலவர், அம்மன் மீது விழுகிறது. கடந்த திங்கள் காலை 6:25 மணிக்கு கிராமமக்கள் ஒன்றுகூடி தீபாராதனை ஏந்தி சூரியனை வரவேற்றனர். சூரிய கதிர் 6:50 மணி வரை 25 நிமிடங்கள் மூலவர், அம்மன் மீது விழுந்தது. அதன்பின் முழுமையாக மறைந்தது. இதனை உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, விருதுநகர் போன்ற வெளி மாவட்ட பக்தர்களும் கண்டு தரிசித்தனர். அதன் பின் அபிஷேகம் நடந்தது. கோயில் திருப்பணி தலைவர் கோவிந்தசாமி, செயலர் இருளாண்டி, பொருளாளர் ஜீவானந்தம் கூறியதாவது: இந்த கோயிலை 41 கிராமங்களை சேர்ந்தோர் வழிபடுகின்றனர். தோஷ நிவர்த்தி, மகப்பேறு, கல்வித் தடை நீக்கம் போன்றவற்றிக்கு பிரசித்தி பெற்றது.

250 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் இலுப்பை மரங்கள், பனைமரங்களுக்கு இடையே குடிசையில் இருந்தது. 1993ல் தான் கோயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்ட இந்த கோயில் மூலவர் மீது சூரிய தரிசனம் கிடைப்பது சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிய வந்தது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar