பதிவு செய்த நாள்
17
மார்
2016
12:03
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சிகள் வரும், 21, 22 ஆகிய தேதிகளிலும், மறுபூஜை விழா, 28 ம் தேதியும் நடக்கிறது. விழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தபாடி, பவானி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, மைசூர், நம்பியூர் ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஈரோடு மண்டலம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களை பயன்படுத்திக் கொள்ளும்படி, கலெக்டர் பிரபாகர், செய்திக்குறிப்பு மூலம் கேட்டுக்கொண்டார்.