க்ஷரம் என்ற சொல்லுக்கு அழியக் கூடியது என்று பொருள். அக்ஷரம் என்றால் அழியாதது என்பது பொருள். ஒலிகளுக்கெல்லாம் ஒலியாக (தாயாக) விளங்கும் ஓம் என்ற பிரணவ மந்திரம் அக்ஷரப் பிரம்மமாகும். இது ஒலி வடிவத்திலுள்ள பரம் பொருளைக் குறிப்பிடுகிறது. பிரணவம் என்பதற்கு நன்றாகத் துதி செய்தல் என்று பொருள்.