பதிவு செய்த நாள்
18
மார்
2016
11:03
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் மகா சம்ப்ரோஷணம், இன்று (18ம் தேதி) நடக்கிறது. விழாவையெ õட்டி, கடந்த 14ம் தேதி சங்கல்பத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை பெருமாள் விசேஷ திருமஞ்சனம், வேதபிரபந்த சாற்றுமுறை, கடம் புறப்பாடாகி, மூலவர், உற்சவர் மூர்த்திகளுக்கு ஆவாஹணம், திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கோவிலில் இருந்து மாலை, கிளி, சேலை ஆகியவை பிரசாதமாக கொண்டு வரப்பட்டு, பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப் பட்டது. இன்று காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம், சுப்ரபாதம், கோ பூஜை நடக்கிறது. பின்னர் கடம் புறப்பாடாகி, காலை 10:00 மணிக்கு நுாதன ராஜகோபுரம், விமான கலசத்திற்கு மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. 10:10 மணிக்கு மூலவர் பெரிய பெருமாள் பிரதிஷ்டை, திருவாராதனம், பி ரம்மகோஷம், அட்சதை ஆசீர்வாதம், சாற்றுமுறை சர்வதரிசனம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு உபயநாச்சியார் சகிதம் பெருமாள் ÷ சஷவாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.