பாகூர் : பாகூர் எல்லை பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு அம்மனுக்கு பால், தேன், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11.30 மணிக்கு தீபாராதனை நடந்தது.விழாவில் அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பூஜை ஏற்பாடுகளை மகளிர் சுய உதவிக்குழு தலைவி அஞ்சாலாட்சி, செயலாளர் ராணி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.